தாயகம் கோரிய உரிமைப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தமிழினத்தை நினைந்துருகுகிறது முள்ளிவாய்க்கால் - LIVE
புதிய இணைப்பு
இறுதி யுத்தத்தின் கோரங்களை அமைதியாய் சுமந்து நிற்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் தற்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மதகுருமார்கள் உள்ளிட்ட பலரும் பொதுச் சுடரின் கீழ் விழுந்து வணங்கி, உயிரிழந்தவர்களை அஞ்சலித்து வருகின்றனர்.
இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளின் புகைப்படங்களோடும், அவர்களுக்குப் பிடித்த உணவுகளோடும் அவர்களை அஞ்சலிக்க முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
தமிழினப் படுகொலையின் 17ஆவது நினைவு தினம் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபியில் பொதுச் சுடரேற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்படும்.
பொதுச் சுடரேற்றப்பட்ட பின்னர், உரிமை கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த தமது இன்னுயிர்களை நினைவில் கொண்டு சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்த பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.













கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri