டலஸ் அணியில் இணையும் பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு அணி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியில் இணையவுள்ளதாக தெரியவருகிறது.
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த டலஸ் அணி
இவர்கள் விரைவில் டலஸ் அணியுடன் இணைவார்கள் என கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரஸ் உட்பட 13 பேர் கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தனர்.
இந்த குழுவினர் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் அடிப்படை வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளனர்.
அத்துடன் புதிய அலுவலகம் ஒன்றை கொழும்பு நாவல பிரதேசத்தில் திறந்து வைத்தனர். நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் டலஸ் அழகப்பெரும போட்டியிட்டது தோல்வியடைந்தார்.
என்னை தோற்கடிக்க இணைந்த பிரபுக்கள் குடும்பங்கள்
ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் நேர் எதிரான பிரபுக்கள் குடும்பங்கள் ஒன்றிணைந்ததாக டலஸ் அழகப்பெரும கூறியிருந்தார்.
நடு தர வகுப்பை சேர்ந்த தன்னை தோற்கடிக்கடி விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ச பிரபுக்கள் குடும்பங்கள் ஒன்றிணைந்தனர் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.