கடந்த ஆண்டில் கட்டுமானத்திற்கான PMIஇல் ஏற்பட்ட விரிவாக்கம்
2024ஆம் ஆண்டு டிசம்பரில் கட்டுமானத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (PMI) 51.4 ஆக இருந்தமை நிர்மாண நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவாக்கத்தைக் குறிப்பதாக இலங்கை மத்தியவங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) அண்மைய அறிக்கை, புதிய கொள்வனவு சுட்டெண் நடுநிலையான வரம்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்டுமானத் திட்டங்களின் எண்ணிக்கை முந்தைய மாதத்தைப் போலவே அதே அளவில் இருந்ததைக் குறிக்கிறது.
வரவு - செலவுத்திட்டம்
இருப்பினும், பலர், கட்டுமான துறையில் வளர்ச்சியைத் தக்கவைக்க இன்னும் பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தினர்.
இதற்கிடையில், வேலைவாய்ப்பு குறியீடு தொடர்ந்து சுருங்கியுள்ள போதிலும், டிசம்பர் மாதத்தில் ஒரு குறைவான முன்னேற்றத்தில் இருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளை, குறிப்பாக எதிர்பார்க்கப்படும் சாதகமான வானிலை காரணமாக, அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டுமான நடவடிக்கைகளுக்கான கண்ணோட்டம் நேர்மறையானதாகவே உள்ளது.
மேலும், தேசிய வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து நிறுவனங்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |