பிரபல வர்த்தகர் ஹரி ஜயவர்தன காலமானார்
பிரபல வர்த்தகர் ஹரி ஜயவர்தன தனது 82ம் வயதில் காலமானார்.
தொன் ஹரால்ட் ஸ்டேசன் ஜயவர்தன எனப்படும் ஹரி ஜயவர்தன இலங்கையின் பிரபல வர்த்தகரும் தொழில் முயற்சியான்மையாளருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கூட்டாண்மை கலாசாரம்
1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி ஜாஎல பிரதேசத்தில் ஹரி ஜயவர்தன பிறந்தார்.
மெல்ஸ்டாகோர்ப் நிறுவனத்தின் தலைவராகவும், டென்மார்க்கிற்கான கௌரவ கொன்சோல் அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.
இலங்கையின் கூட்டாண்மை கலாசாரத்தை கட்டமைப்பதில் ஹரி ஜயவர்தனவின் பங்களிப்பு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் செல்வந்தர்களில் ஒருவராக ஹரி ஜயவர்தனவை போர்பஸ் சஞ்சிகை அடையாளப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டி.சி.எஸ்.எல் மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் போன்ற நிறுவனங்களில் தலைவராக ஹரி ஜயவர்தன கடமையாற்றியுள்ளார்.