இந்திய பிரதமரின் பாதுகாப்பில் பாரிய குளறுபடி பஞ்சாப் பொலிஸ் மீது குற்றச்சாட்டு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு தொடர்பில் மத்திய உளவுத்துறை அளித்த தகவல்களை பஞ்சாப் போலீசார் பின்பற்றவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதுவே பிரதமரின் பயணித்தில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சனைக்கான காரணம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூரில் நேற்று நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்தார்
இந்த நிகழ்ச்சிக்காக நேற்று காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகொப்டர் வாயிலாக செல்ல இருந்தார்.
எனினும் மோசமான வானிலை கரணமாக மோடியின் ஹெலிகொப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.
இருப்பினும் ,போரட்டம் ஒன்று காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் “பதிண்டா” என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன அணி, 20 நிமிடங்கள் தரிக்க நேரிட்டது.
இதன் காரணமாக பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமர் மோடி திரும்பிச்சென்றார்.
இதனையடுத்து பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து உரிய விளக்கம் அளிக்க பஞ்சாப் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.






CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
