வெள்ளைக்கொடி சம்பவம் மட்டுமல்ல அனைத்தையும் விசாரித்தே தீருவோம்! பிரதமர் பகிரங்கம்

Sri Lankan Tamils Tamils Geneva Sri Lanka Final War Harini Amarasuriya
By Rakesh Sep 08, 2025 03:51 AM GMT
Report

பொறுப்புக்கூறல் விசாரணைகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில் இடம்பெற்ற வெள்ளைக்கொடி மாத்திரமல்ல முன்னெடுக்கப்பட வேண்டிய எந்தவொரு விசாரணைகளுக்கும் எமது அரசு தடையாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2009 இறுதி யுத்தத்தில் சிக்கிய சீக்கியர் - சோனியாவுக்கு இரகசியங்களை வழங்கினாரா கருணா

2009 இறுதி யுத்தத்தில் சிக்கிய சீக்கியர் - சோனியாவுக்கு இரகசியங்களை வழங்கினாரா கருணா

ஜெனிவா அமர்வுகள்

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வெள்ளைக்கொடி சம்பவம் மட்டுமல்ல அனைத்தையும் விசாரித்தே தீருவோம்! பிரதமர் பகிரங்கம் | Pm Harini On White Flag Case Global Role Sarath

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"உண்மையில் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமையினால்தான் இலங்கை மீது ஜெனிவாக் குற்றச்சாட்டுக்களும் நெருக்கடிகளும் வலுப்பெற்றுள்ளன.

கடந்த ஆட்சியாளர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று, வெறும் அறிக்கைகளைச் சமர்பித்து வந்துள்ளார்களே தவிர அங்கு வழங்கும் உறுதிமொழிகளை உள்நாட்டில் நிறைவேற்றுவதில் ஆர்வம் செலுத்தவில்லை.

ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வுகள் நடக்கும் போது இலங்கையில் இருந்து செல்லும் தரப்பு அறிக்கையைச் சமர்பித்து விட்டு நாடு திரும்பியதும் அதனை மறந்து விடுகின்றனர்.

மறுபடியும் ஜெனிவா அமர்வுகள் ஆரம்பிக்கும் போது தான் வழங்கிய உறுதிமொழிகளும் அறிக்கையும் அவர்களின் நினைவுக்கு வருகின்றது. இதுவரை காலமும் இவ்வாறானதொரு நிலைமையே நாட்டில் இருந்துள்ளது.

ஜெனிவாவில் சூடுபிடிக்கும் ஈழத்தமிழர் விவகாரம்! சுவிட்சர்லாந்தில் இலங்கை அரசின் மற்றுமொரு நகர்வு..

ஜெனிவாவில் சூடுபிடிக்கும் ஈழத்தமிழர் விவகாரம்! சுவிட்சர்லாந்தில் இலங்கை அரசின் மற்றுமொரு நகர்வு..

செம்மணி மனித புதைகுழி

சர்வதேசத்துடன் தொடர்புப்பட்ட விடயங்களாக இவற்றைக் கருதும் போது இதுவொரு தவறான அணுகுமுறையாகும்.

ஜெனிவா மனித உரிமைகள் விடயத்தில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது, கொள்கை ரீதியாகச் செயற்படுவது என்பது தொடர்பில் எமது அரசு ஏற்கனவே தீர்மானங்களை எடுத்துள்ளது.

வெள்ளைக்கொடி சம்பவம் மட்டுமல்ல அனைத்தையும் விசாரித்தே தீருவோம்! பிரதமர் பகிரங்கம் | Pm Harini On White Flag Case Global Role Sarath

உதாரணமாக செம்மணி மனித புதைகுழி உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஊடகங்களை அழைத்து சென்று அந்த விசாரணைகளைப் பிரசாரம் செய்ய வேண்டிய தேவை இல்லை. மறுபுறம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு விசாரணைக்கும் அரசு தடையாக இருக்கவில்லை என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருப்பின் முறைப்பாடு செய்யலாம்.

கச்சத்தீவை இந்தியா கைப்பற்றினால் என்ன நடக்கும்?ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் டக்ளஸ்!

கச்சத்தீவை இந்தியா கைப்பற்றினால் என்ன நடக்கும்?ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் டக்ளஸ்!

பொறுப்புக்கூறல் விசாரணைகள்

சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். ஆகவே, யாரையும் பாதுகாப்பதற்காக எமது அரசு கடமைப்பட்டில்லை.

அது மாத்திரமன்றி ஜெனிவாக் குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே அரசின் முதன்மையான கடமையாக உள்ளது. எனவே, ஜெனிவா சக்கரத்தில் இருந்து முதலில் வெளிவர வேண்டும்.

பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல.

வெள்ளைக்கொடி சம்பவம் மட்டுமல்ல அனைத்தையும் விசாரித்தே தீருவோம்! பிரதமர் பகிரங்கம் | Pm Harini On White Flag Case Global Role Sarath

மாறாக எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம்.

விசேடமாக இந்த அரசு அவர்களுக்கு உரியது என்பதைப் பாதிக்கப்பட்ட மக்கள் உணர வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். இதுவே எமது நிலைப்பாடாகும்.

ஆனால், இதுவரை காலமும் அந்த விசாரணைகள் இடம்பெறவில்லை என்பது வேறு ஒரு விடயமாகும். செம்மணி மனிதப் புதைகுழி மாத்திரம் அல்ல வேறு பல மனித புதைக்குழிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்த விசாரணைகள் ஊடாக பக்கச்சார்பின்றி நேர்மையாக அரசால் செயற்பட முடியும் என்பதனையும் , எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்க முடியும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளோம்.

இறுதிப் போர்

இந்த விசாரணைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளைத் தேவைக்கு ஏற்ப சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், விசாரணைப் பொறிமுறைக்குப் பொறுப்பானவர்களாக இலங்கை இருக்க வேண்டும்.

வெள்ளைக்கொடி சம்பவம் மட்டுமல்ல அனைத்தையும் விசாரித்தே தீருவோம்! பிரதமர் பகிரங்கம் | Pm Harini On White Flag Case Global Role Sarath

மாறாக அந்தப் பொறுப்பில் சர்வதேசம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

எனவே, ஜெனிவா குற்றச்சாட்டுக்களில் நிபுணத்துவ ஒத்துழைப்புகளைச் சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவும் தயராகவே உள்ளோம்.

ஆனால், விசாரணைகளின் பொறுப்பாளர்களாக இலங்கை இருக்கும். இறுதிப் போரில் இடம்பெற்ற வெள்ளைக்கொடி மாத்திரமல்ல முன்னெடுக்கப்பட வேண்டிய எந்தவொரு விசாரணைகளுக்கும் எமது அரசு தடையாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

[1HC0MU4

]

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US