உடல் சுகயீனம் ஏற்பட்ட மாவையை சந்தித்த முக்கியஸ்தர்கள்!
திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவை முக்கியஸ்தர்கள் சிலர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர் பிருந்தாவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் ஆகியோரே இவ்வாறு சென்று நலம் விசாரித்துள்ளனர்.
தமிழ் தேசிய ஒற்றுமை
இதன்போது மாவை சேனாதிராஜாவின் உடல்நலம் தொடர்பாக விசாரித்ததோடு அவருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளனர்.

இவர் தொடர்ச்சியாக நலமோடு தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri