நடிகர் விஜயகாந்தின் மரணத்திற்கு தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் இரங்கல்
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த்தின் மறைவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த கட்சி இன்று (29.12.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழர்கள் மீது மாறாத பற்று
” கப்டன் விஜயகாந்த் திரையுலக வாழ்க்கைக்கு வர முன்பும் வந்த பின்பும், அரசியல் வாழ்க்கையில் தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் மாறாத பற்றுக்கொண்டிருந்தவர்.
இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தை உறுதியாக ஆதரித்திருந்ததோடு போராளிகள் அமைப்புகளுடன் ஆத்மார்த்தமான உறவினைப் பேணியவர்.
போராளிகளின் தேவை உணர்ந்து பெறுமதிமிக்க உதவிகளையும் வழங்கியவர். ஈழத்தில் தமிழ் மக்களுக்கு நீண்டு நிலைத்திருக்கக் கூடிய விடுதலை கிடைக்க வேண்டுமெனும் நிலைப்பாட்டினை தனது வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தவர்.
தமிழகத்தின் ஆத்ம பலம்
இலங்கையில் தமிழர்களுக்கு பாதகம் நிகழும் சந்தர்ப்பங்களில் எல்லாம் உரிமையுடன் ஆதரவுக்கரம் நீட்டும் தமிழகத்தின் ஆத்ம பலத்திற்கு இதுவோர் பாரிய இழப்பாகும்.
மேலும், கப்டன் விஜயகாந்த்தின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிர்வாகிகள்,உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கும் மற்றும் திரையுலத்தாருக்கும் தமது அமைப்பின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
