தடைப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு பணிகள் ஆரம்பம்: மருதபாண்டி ராமேஸ்வரன் (Photos)
தடைப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு பணிகள் தற்போது தொடரவுள்ளது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய தலவாக்கலை ஓலிரூட் உள்ளிட்ட நாகசேனை மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச தோட்டப்பகுதிகளுக்கு இ.தொ.கா குழுவினருடன் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் இன்று (31.03.2023) கள விஜயத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது தலவாக்கலை, நாகசேனை, மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச தோட்டப்பகுதிகளில் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்டு முழுமைப் பெறாத தனிவீடு கட்டடங்களையும் பார்வையிட்டார்.
அபிவிருத்தி பணிகள்
அத்துடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இப்போது அமைச்சு பதவியை பொறுப்பேற்றதன் பின், தோட்டங்களில் கட்டியமைக்கப்பட்டு முழுமை பெறாது காணப்படும் தனி வீடுகளை அபிவிருத்தி ஊடாக முழுமைப்படுத்தி வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கென மலையகத்தில் எங்கெல்லாம் தனிவீடுகள் அமைக்கப்பட்டு முழுமைப்படுத்தாமல் இருக்கின்றதோ அங்கெல்லாம் கள விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகள் ஆராயப்பட்டு அதற்கான அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த கள விஜயத்தின் போது காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான ஏ.பி.சக்திவேல் உள்ளிட்ட உப தலைவர் எம்.சச்சிதானந்தன், அக்கரப்பத்தனை பிரதேச சபை முன்னாள் தலைவர் இராமன் கோபால் உடன் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
