இ.தொ.காவின் மக்கள் சந்திப்பு! அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் மீண்டும் ஆரம்பம்
நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக கடந்த காலங்களில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சுமார் 06 மாத காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மக்கள் குறைகேட்கும் சந்திப்பின் முதல் சந்திப்பு நுவரெலியா - உடப்புஸ்ஸலாவ டலோஸ் தோட்டம் முத்து மண்டபத்தில் நேற்றைய தினம் (30.03.2023) முதல் ஆரம்பமாகியது.
இதைத் தொடர்ந்து உடப்புஸ்ஸலாவை நகர மக்கள் உள்ளிட்ட சென் மாக்கிறட் தோட்ட மக்களை அமைச்சர் கே.டி.எஸ்.வரவேற்பு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் மக்கள் கலந்து கொண்டனர்.
அடக்குமுறைகள் மற்றும் தொழில் கெடுப்பிடிகள்
அமைச்சரின் கவனத்திற்கு கலந்து கொண்ட தோட்ட மக்கள் தமக்கான குறைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி அபிலாஷைகளை தெரிவித்தனர்.
இதனையடுத்து மூன்றாவது சந்திப்பு உடப்புஸலாவை எமஸ்ட் தோட்ட விளையாட்டு மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
இதில் கலந்து கொண்ட அமைச்சருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் எமஸ்ட் தோட்ட மக்கள் உள்ளிட்ட பலர் தங்களுடைய குறைப்பாடுகளை மனம் திறந்து வெளியிட்டனர்.
அத்துடன் வீடமைப்பு, குடிநீர், மற்றும் தோட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகள் மற்றும் தொழில் கெடுப்பிடிகள் தொடர்பில் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மக்கள் சந்திப்பு
அதேநேரத்தில் உடப்புஸ்ஸலாவை பிரதேச மக்களுக்காக ஆரம்பமான மூன்று மக்கள் சந்திப்பில் மக்கள் குறைகளை செவிமெடுத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு அரசியல் ரீதியாகவும்,தொழிற்சங்க ரீதியாகவும் பேச்சுவார்த்தை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
தற்போது மீண்டும்
ஆரம்பிக்கப்பட்ட பிரதேசவாரியான மக்கள் குறை கேட்கும் மக்கள் சந்திப்பு
தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
இந்த மக்கள் சந்திப்பில் நுவரெலியா பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் வேலு
யோகராஜ் மற்றும் வலப்பனை பிரதேச சபையின் முன்னால் இ.தொ.கா உறுப்பினர்கள்
மற்றும் தொழிற்சங்க பிரதிநதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி: அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன...! 10 மணி நேரம் முன்

அமெரிக்காவுக்கு பதில் ரஷ்யாவுக்கு செல்லுங்கள்! கடும் எதிர்ப்பால் அவசரமாக வெளியேறிய ஜே.டி.வான்ஸ் News Lankasri
