அமெரிக்காவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கிய விமானம்
அமெரிக்காவில் சிறிய ரக விமானமொன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வோஷிங்டனில் உள்ள புல்மேன் விமான நிலையத்தில் இருந்து 4 பேருடன் புறப்பட்ட சிறிய ரக விமானம், மொண்டானாவின் காலிஸ்பெல் சிட்டி விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம்(11) தரையிறங்கியுள்ளது.
பயணிகள் அவதி
உள்ளூர் நேரப்படி நேற்றுமுன்தினம்(11) பிற்பகல் 2 மணிக்கு தரையிறங்கும் போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி தீப்பிடித்துள்ளது.
தொடர்ந்து, விமான நிறுத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் விமானம் மீது மோதியது.
உடனடியாக சிறிய ரக விமானத்தில் பயணித்த 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
விமான நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்த விமானங்களில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலம் போல காட்சியளித்துள்ளது.
இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா





முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam
