2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சி
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்க எதிர்க்கட்சி முயற்சிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் அவர்களின் செயல்களை முன்னாள் ராஜபக்ச நிர்வாகத்தின் செயல்களுடன் ஒப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தாக்குதல்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண பாதுகாப்புப் படைகளின் தளபதியாக அவர் பதவி வகித்த காலப்பகுதி தொடர்பில் இன்னும் விசாரணையில் உள்ளது என குறிப்பிட்டார்.
இத்துடன் அவரை பதவி நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அவர் நிராகரித்தார். முந்தைய நாடாளுமன்ற அல்லது ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளின் போது அருண ஜயசேகரவின் பெயர் எழுப்பப்படவில்லை.
எதிர்க்கட்சியின் கோரிக்கைகளின் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது. உண்மையான சூத்திரதாரி பக்கத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாக எதிர்க்கட்சியின் திடீர் ஆர்வம் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை தகவல்கள் இருந்தபோதிலும் செயல்படத் தவறியவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணைகள் குறிவைப்பதாக அவர் மேலும் கூறினார்.



