வருமானத்தில் 5 சதவீதம் வரியாக அறவிடப்படுமா? அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது
மாதாந்த வருமானத்தில் 5 சதவீதம் வரி அறவிட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5 சதவீதம் வரி அறவிடும் எந்த எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் வைத்து இலங்கை அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வர்த்தக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன, ஒரு இலட்சத்திற்கும் அதிக மாதாந்த சம்பளம் பெறும் அனைவருக்கும் 5 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக நலத்துறைகளின் பராமரிப்புக்கான குறைந்தபட்ச “சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு” என கூறி இந்த நூற்றுக்கு 5 சதவீத வரியை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5 சதவீத வரி அறவிடும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை.
இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri