இலங்கை மக்களின் வருமானத்தில் 5 வீதத்தை வரியாக அறவிட திட்டம்?
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நெருக்கடிக்கு மத்தியில் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது சேவைகளை நடத்தி செல்ல பொது மக்களின் மாதாந்த வருமானத்தில் 5 வீதம் வரி அறவிட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சத்திற்கு அதிக மாதாந்த சம்பளம் பெறும் அனைவருக்கும் இந்த வரி விதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக நிகழ்வு ஒன்றில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக நலத்துறைகளின் பராமரிப்புக்கான குறைந்தபட்ச “சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு” என கூறி நூற்றுக்கு 5 வீதம் வரி விதிக்க வேண்டும்.
வருமான மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் சராசரியாக ஒரு லட்சத்திற்கு மேல் மாத வருமானம் உள்ள அனைவரிடமிருக்கும் இந்த வரி விதிக்கப்பட வேண்டும்” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 17 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri