நாடளாவிய ரீதியில் ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதிகளை புனரமைக்க திட்டம்
நாட்டின் பொருளாதார ஸ்திர தன்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வீதிப் புனரமைப்பு பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப்பங்களிப்புடன் ஆரம்பமாகியுள்ளன.
இந்நடவடிக்கையானது, இன்றைய தினம் (29.02.2024) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
வீதி புனரமைக்கும் திட்டம்
2004ஆம் ஆண்டு 1.500 கிலோ மீற்றர் வீதிப் புனரமைப்பு திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட குறித்த திட்டத்தினை ( 3+000கிமீ 3+450 கிமீ) வீதி போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக இடை நிறுத்தியிருந்தது.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவில் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பணிப்புரைக்கு அமைவாக அரசாங்கத்தின் நாடாளாவிய ரீதியில் ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதிகளை புனரமைக்கும் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
