ஜகத் வித்தான எம்.பியை கொலை செய்ய திட்டம்: நாடாளுமன்றில் சலசலப்பு..
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தான தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் ஆரம்பிக்கப்பட்டு வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொலை அச்சுறுத்தல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதி சபாநாயகரிடம்,தனது கட்சியின் உறுப்பினரான ஜகத் வித்தானகேவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறியதை தொடர்ந்து, உரையாற்றிய ஜகத் வித்தான,

பொலிஸ் மா அதிபரிடமிருந்து களுத்துறை பகுதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டிருக்கும் இரகசிய தகவல் அறிகையில்,ஜகத் வித்தான வீட்டிலிருந்து வாகனத்தில் செல்லும் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
கொலையாளி தொடர்பான பெயர் விபரங்கள் தெரிவித்து அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு களுத்துறை பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரகசிய கடிதம் எனக்கு கிடைத்துள்ளது.
அது தொடர்பில் கவனம் எடுத்து எனக்குரிய பாதுகாப்பை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். அந்த கடித்தத்தை நாடாளுமன்றத்தில் சபையிடம் கையளித்துள்ளார்.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam