பாம்பை வைத்து பீட்சா: அச்சத்தில் பொதுமக்கள்
ஹாங்காங்கில் உள்ள Pizza Hut உணவகமானது வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் பாம்பு பீட்சாவை உருவாக்கி விற்பனை செய்துவருகிறது.
பீட்சாவானது ஹாங்காங், தெற்கு சீனா மற்றும் வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் பிரபலமான ஒரு உணவாகவுள்ள நிலையில் பாம்பு பீட்சா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆரோக்கிய நன்மைகள்
குறித்த பீட்சாவானது துண்டாக்கப்பட்ட பாம்பு இறைச்சி, கருப்பு காளான்கள் மற்றும் சீன உலர்ந்த ஹாம்கள் ஆகியவற்றை ஒற்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
அபலோன் சாஸுடன் கூடிய 9 அங்குல இந்த பாம்பு பீட்சாவானது நவம்பர் 22 வரை விற்பனைக்கு இருக்கும் என கூறப்படுகிறது.
பல நாடுகளில் பீட்சாவின் மீது பல பொருட்களை வைத்து பரிமாறுவது வழக்கமாகவுள்ள நிலையில் ஆசிய நாடுகளில் நீண்ட காலமாக பாம்புகளை ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கூறி பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
