ரோபோவின் தவறால் ஒருவர் பலி
தென்கொரியாவில் தொழிற்சாலை ஒன்றில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி காய்கறி பெட்டிகளை கன்வேயர் பெல்டில் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரோபோ ஒன்று, காய்கறி பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தென்கொரியாவின் நேற்றைய தினம் (08) கியோங்சாங் மாகாணத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் அறுவடை செய்யப்பட்ட மிளகுகளை தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் பணிகளை ரோபோக்களே செய்து வருகிறது.
ஏற்றுமதி பணி
இவ்வாறு தரம் பிரித்த மிளகு பெட்டிகளை கன்வேயர் பெல்டிற்கு ஏற்றும் பணி நிகழ்ந்துகொண்டிருக்கையில் அருகில் நின்ற ஊழியரையும் தூக்கி இந்த ரோபோ கன்வேயர் பெல்டில் வைத்து அழுத்தியுள்ளது.
இதன் போது அந்த ஊழியரின் முகம் மற்றும் மார்பு பகுதிகள் நசுங்கிய நிலையில் அந்த ஊழியர் அலறி சத்தமிட்ட நிலையில் அங்கு அருகிலிருந்த மற்றைய ஊழியர்கள் இவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
உயிரிழந்த ஊழியர் தென்கொரியாவின் கியோங்சாங் மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.
குறித்த தொழிற்சாலை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இனி வரும் காலங்களில் இவ்வாறான விபத்துக்கள் ஏற்பாடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகிற்கு நன்மைகளை அளித்தாலும் இத்தகைய விபத்துக்கள் செயற்கை நுண்ணறிவு மீதான நம்பிக்கையினை கேள்விக்குறியாக்குகின்றது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
you may like this,

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
