பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாடு: தாய்லாந்து பிரதமர் இலங்கை வருகை
தாய்லாந்து பிரதமர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கை, இந்தியா, தாய்லாந்து உட்பட 7 நாடுகள் அங்கம் வகிக்கும் பிம்ஸ்டெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதமர், கொழும்பு வந்து, அடுத்த தலைமைப் பதவியை ஏற்பார்.
ஏனைய தலைவர்கள்
‘ஒன்லைன்’ மூலம் மாநாட்டில் பங்கேற்பார்கள்.
அத்துடன், பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு
இடையிலான சந்திப்பு மார்ச் 29ஆம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 1 மணி நேரம் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan
