இலங்கையை விட்டு வெளியேறும் விமானிகள் - பாரிய நெருக்கடியில் விமான சேவை
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் பணியிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, தற்போது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பணியாற்ற வேண்டிய 56 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்தா தெரிவித்தார்.
உண்மையில் இலங்கையில் விமான சேவைக்கு குறைந்தது 138 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்படுவதாகவும் ஆனால் தற்போது 82 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மாத்திரமே சேவையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு 25 புதிய பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்கள் தொழில் நிபுணத்துவம் பெறுவதற்கு சுமார் 10 வருடங்கள் ஆகும் எனவும் தலைவர் தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு மேலதிகமாக, இலங்கை விமானிகளும் அதிக எண்ணிக்கையில் சேவையை விட்டு வெளியேறுகின்றவதாக தெரியவந்துள்ளது.
தற்போது இலங்கை சேவையில் இருக்க வேண்டிய 250 விமானிகளில் 44 பேர் பணியை விட்டுவிட்டு வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் விமானிகளுக்கு சர்வதேச சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் இந்த சேவைகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
