போர்த்துகலில் இரு விமானங்கள் நடுவானில் மோதி விபத்து: விமானி பலி
போர்த்துகல்(Portugal) நாட்டில் தெற்கில் உள்ள பெஜா விமான நிலையத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டதில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய விமானி ஒருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான சாகச நிகழ்ச்சியின் போது பல இராணுவ விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் சாகசங்களில் ஈடுபட்டுள்ளன.
விமான சாகச நிகழ்ச்சி
சாகசத்தின் போது இரு விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட சம்பவம் அங்குள்ள பார்வையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து விமான படை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
"பெஜா விமான சாகச் நிகழ்ச்சியில் இரு விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட சம்பவம் அரங்கேறியதை விமான படை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |