உயிருடன் இருக்கும் ஒரே சாட்சியம் பிள்ளையான்! போர் வீரராக அடையாளப்படுத்தும் கம்மன்பில
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஓர் தேசிய வீரர் என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
அண்மையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை அண்மையில் நேரில் சந்தித்து கலந்துரையாடிய கம்மன்பில இன்றைய தினம் நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் போராளிகள்
சிறுவர் போராளிகள் புலிகள் அமைப்பில் இருந்தனர் என்பதை பறைசாற்றக்கூடிய உயிருடன் இருக்கும் ஓர் ஆதாரமாக பிள்ளையானை நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேசப்பற்றுள்ள ஓர் தேசிய வீரராக பிள்ளையானை போற்ற வேண்டும் எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது சமூக ஊடகங்களில் செய்தி எழுதும் பல்வேறு இளம் தலைமுறைக்கு பிள்ளையான் யார் என்பது தெரியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளின் தோல்வியின் ஆரம்பமே கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியமை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
14 வயதில் பலவந்தமாக சிறுவர் போராளியாக பிள்ளையான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர் எனவும் சிறுவர் போராளிகள் புலிகள் அமைப்பில் இருந்தனர் என்பதை பறைசாற்றக்கூடிய உயிருடன் இருக்கும் ஓர் ஆதாரமாக பிள்ளையானை நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து பிளவடைந்து ராணுவத்தில் இணைந்து யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மிகச் சிறந்த போர் வீரர்களாக பிள்ளையான் மற்றும் கருணாவை அடையாளப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து வந்த புலி போராளிகளுக்கு கிழக்கின் சூழ்நிலைகள் புரியாத காரணத்தினால் அவர்கள் தோல்வியை தழுவியதாகவும் அந்த தோல்விக்கு பிரதானமான ஓர் கருவியாக பிள்ளையான் செயல்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே பிள்ளையான் தொடர்பில் பிழையான தகவல்களை ஊடகங்களில் பரப்புவது ஏற்புடையது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தலைமுறையினர் பிள்ளையான் யார் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பலர் நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள் எனவும், புலம்பெயர் நாடுகளில் இன்னமும் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள் எனவும், பல்வேறு சொத்துக்களை குவித்துள்ளனர் எனவும் சிலர் தன்னார்வ நிறுவனங்களின் பிரதான பதவிகளை வகிக்கின்றார்கள் எனவும் பிள்ளையான் கூறியதாக உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
தாம், படையினருக்கே வழங்கிய ஒத்துழைப்பு உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாகவும் புலிகள் தரப்பில் இருந்தவர்களை விட்டுவிட்டு புலிகளுக்கு எதிராக போர் தொடுத்த தம்மை இவ்வாறு நீண்ட காலம் துன்புறுத்துவது குறித்து மிகுந்த கவலை கொள்வதாக பிள்ளையான் கண்ணீர் விட்டு அழுதார் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
