அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதி! பிள்ளையான் பிணையில் செல்லலாம்...
கிழக்கின் கொடூரமான மனித வேட்டைகளுக்கு காரணமானவர்கள் என பிள்ளையானும் இனியபாரதியும் கைது செய்யப்பட்டு விசாரணை வலையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
பிள்ளையானின் கைது விவகாரம் ஒரு பேசுபொருளாகவே தொடரும் நிலையில் இனிவரும் நாட்களில் பிள்ளையானுக்கான பிணை வாய்ப்புகளுக்கு சாத்தியமிருப்பதாக நம்பப்படுகிறது.
பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.
அப்படி நீக்கப்பட்டால் அதன் பின் பிள்ளையான் பிணை கோரமுடியும். அதே நேரம் பிள்ளையான் என்ற நபருக்காக தமிழ் மக்கள் நீண்டகாலமாக அனுபவித்து வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமல் இருக்க முடியாது.
கிட்டத்தட்ட இரண்டுமே தமிழ் மக்களுக்கு ஒரே அளவான வேதனைகளையே தந்து நிற்கின்றன.
எனவே தான் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் பிள்ளையானுக்கான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் கோருகின்றனர்.
இப்போதைக்கு பிள்ளையான், இனியபாரதி தொடர்பில் சாட்சியங்களை சொல்ல அவர்களின் முன்னாள் சகாக்களும் பாதிக்கப்பட்ட மக்களுமாக சாட்சி சொல்ல தயாராகி வருகின்றனர் என்ற நிலையில் இந்த விவகாரம் விரைவுபடுத்தப்பட வேண்டியதன் தேவையை பேசுகிறது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...

அதிபர் தவராசாவும் கருணாவால் இலக்கு வைக்கப்பட்டாரா! இரு தசாப்தம் கடந்து அவிழ்க்கப்படும் முடிச்சுக்கள்..





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
