அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி! சம்பளத்தில் ஒரு தொகையை இழக்க நேரிடும்
சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று(14) முதல் இவ்வாறு அபராதம் விதிக்கும் செயன்முறை நடைமுறைக்கு வரும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், பல அதிகாரிகள் தங்களது சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், இன்றைய(15) தினத்திற்குப் பின்னர் விபரங்களை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இறுதி முடிவு ..
ஆணைக்குழு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அபராதம் விதிப்பது தொடர்பில் இறுதி முடிவு நேற்றையதினம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இதன்படி, இன்று முதல் தாமதமாகும் நாட்களுக்கான அபராதம் அவர்களின் சம்பளத்தில் அறவிடப்படும்.

ஜூன் 30 ஆம் திகதிக்குள் சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு, மேலும் 02 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் காலத்தில் மதிப்பீட்டறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சலுகைக் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அதிகாரிகளின் பெயர் பட்டியலை நிறுவனத் தலைவர்கள் எதிர்வரும் நாட்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவித்துள்ளது.
You may Like This..
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam