கிழக்கில் சிஐடி கண்வைத்துள்ள முக்கிய புள்ளிகள்.. பிள்ளையானை தொடர்ந்து நிகழப் போகும் அதிரடி கைதுகள்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அவர் தொடர்பில் 40 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி குற்றபுலனாய்வு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில், பிள்ளையான் உடன் தொடர்புடைய மற்றும் நாட்டில் இடம்பெற்ற பல குற்றச்சாட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட பலர், வரும் வாரங்களில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் கைது..
அவ்வாறே, பிள்ளையானுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த மற்றும் பிள்ளையானின் சகாக்கள் என்று கூறப்பட்டு விசாரணை வளையத்திற்குள் இன்னும் உள்வாங்கப்படாத சில முக்கிய நபர்கள் மட்டக்களப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள், மிகச் சாதராணமாக வெளியிடங்களில் உலவி திரிவதாகவம் விரைவில் குறித்த நபர்கள் கைது செய்யப்படலாம் எனவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, மட்டக்களப்பில் அல்லது கிழக்கில் பிள்ளையானின் சகாக்களாக இருந்தவர்கள் மீது சிஐடி கவனம் செலுத்தியுள்ளதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri