இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் எச்சரிக்கை
நீதியை நிலைநாட்டுவதைத் தடுக்கும் அல்லது ஊழலை ஒழிக்கும் போராட்டம் தொடர்பாக பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆதாரமற்ற அறிக்கைகளைப் பரப்புவதற்கு கருத்து சுதந்திரம், தவறாகப் பயன்படுத்தப்பட முடியாது என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, ஆணைக்குழு தொடர்பில் தவறான பிரசாரங்களை மேற்கொள்பவர்கள் அல்லது ஆணைக்குழுவையோ அதன் செயற்பாடுகளையோ இழிவுபடுத்துபவர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் ஊழலுக்கு எதிரான சட்டம் (Anti-Corruption Act) மற்றும் ஏனைய பொருத்தமான சட்டங்களின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆணைக்குழு தயங்காது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் முக்கிய அவதானிப்புகள் மற்றும் எச்சரிக்கை பல்வேறு மறைக்கப்பட்ட நோக்கங்களுடன் செயற்படும் சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தொடர்பாக ஆதாரமற்ற மற்றும் தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை பல்வேறு வழிகளில் பரப்புவதில் ஈடுபட்டுள்ளதை ஆணைக்குழு கடுமையான கவலையுடன் அவதானிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் கோரிக்கை
இத்தகைய நடவடிக்கைகள் ஆணைக்குழுவின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதுடன், தற்போது நடைபெற்று வரும் முக்கிய விசாரணைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சட்டப்படி செய்யப்படுகின்றனவா என்பது குறித்து திரிபுபடுத்தப்பட்ட கருத்தை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் இல. 09இன் ஊழலுக்கு எதிரான சட்டத்தின் மூலம் ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் அதிகாரத்தை சுதந்திரமாகவும், பயம் அல்லது பக்கச்சார்பின்றி செயற்படுத்துவதை உறுதி செய்வதாகவும் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை விரைவாகவும், பக்கச்சார்பின்றியும், சட்டத்திற்கு அமையவும் மேற்கொள்வதற்கான தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை ஆணைக்குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த மிக முக்கியமான பணியில் இருந்து மக்களை தவறாக வழிநடத்தவும் மற்றும் கவனத்தை திசைதிருப்பவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களிடம் ஆணைக்குழு கோரிக்கை விடுக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



