போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் விருந்து! மகிந்தவிற்கு விரித்த வலையில் சிக்கிய ஜே.வி.பி
தென்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்தொகை போதை பெருட்கள் கடத்தலில் தொடர்புடையவர் என கூறப்படும் சனத் வீரசிங்க, ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினராவார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடத்திய ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பிடிக்கப்பட்ட போதை பொருட்கள் அனைத்தும் இந்த அரசாங்கத்தின் காலத்தில் கொண்டு வரப்பட்டது என நாம் தொடர்ச்சியாக கூறி வந்தோம்.
கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் இறுதி கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஜனாதிபதி முதல் அனைவரும் சனத் வீரசிங்க என்றழைக்கப்படும் 'புவக்தண்டாவே சனா'வின் வீட்டில் இரவு போசனத்தை எடுத்துள்ளனர். என்றும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
இவ்வாறான உள்நாட்டு வெளிநாடடுகளில் இடம்பெற்ற முக்கிய செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய நாளுக்கான லங்காசிறியின் செய்திகளின் தொகுப்பு...



