மகிந்தவின் விஜேராம வீடு குறித்து மீண்டும் எழும் சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், மகிந்த ராஜபக்ச, வீட்டை விட்டு வெளியேறி சுமார் மூன்று வாரங்கள் ஆகியும், அது இன்னும் அதிகாரப்பூர்வமாக பொது நிர்வாக அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என்று நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
கிண்டல் பேச்சு..
எதிர்காலத்தில் இந்த நிலைமை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை ஒழிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் விஜேராம மாவத்தையில் உள்ள தனது இல்லத்தை விட்டு வெளியேறினார்.
இப்போதெல்லாம் தங்காலையில் வசிக்கும் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க பலர் செல்கிறார்கள் என்றும், அவர் விஜேராமவில் இருந்தபோது அவரைச் சந்தித்திருந்தால் நல்லது என்றும் அமைச்சர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மகிந்த ராஜபக்ச விரைவில் கொழும்புப் பகுதியில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்புவார் என்று எதிர்பார்ப்பதாக நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறியுள்ளார்.

மன்னார் காற்றாலை போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி! பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட இளைஞர்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



