லிந்துலை - கேம்பிரி தோட்டத்தில் நடைபெற்ற வழிப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்
வருடாந்த சதுர்த்தி பெருவிழா பூஜையை முன்னிட்டு லிந்துலை - கேம்பிரி மேற் பிரிவு அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள் இடம்பெற்றதோடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வழிப்பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேக பிரதிஷ்டா நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று(07) நடைபெற்ற குறித்த பூஜை வழிபாடுகளில் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் கலந்துக்கொண்டுள்ளார்.
கும்பாபிஷேக நிகழ்வு
அத்துடன், ஸ்ரீ முத்துமாயம்மன் ஆலயத்தில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரதான கும்பத்தை வீதிவலமாக வழிப்பிள்ளையார் ஆலயத்திற்கு கொண்டுவந்ததோடு வேத ஆகம மந்திரங்கள் ஒலிக்க பக்தர்களின் ஆரோகரா கோஷத்தோடு கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மேலும், பூஜைகளில் கலந்து சிறப்பித்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு விபூதி பிரசாதமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri