நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோயிலில் ஆவணி சதுர்த்திப் பெருவிழா
நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோயில் ஆவணி சதுர்த்திப் பெருவிழா இன்று சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு நடைபெறவுள்ளது.
காலை நிகழ்வாக 1008 சங்காபிஷேகம், பஞ்சமுகப் பிள்ளையார் அர்ச்சனை மற்றும் தீபாரதனைகள் நடைபெறவுள்ளன.
வில்லிசை நிகழ்வு
மதியம் 12 மணிக்கு மகேஸ்வர பூசை நடைபெறும். மாலை நிகழ்வுகள் 5 மணியளவில் மூலஸ்தான பூஜையுடன் ஆரம்பமாகி மாலை 6.30 மணியளவில் வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி உலா வருவார்.
இதேவேளை, சைவசமய அறிவுசார் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு மாலை 5.30 மணிக்கு ஆலய உள்வீதி மண்டபத்தில் நடைபெறும்.
அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வில்லிசை நிகழ்வும் நடைபெறவுள்ளது. இரவு 8.30 மணிக்கு இராப் போசனம் வழங்கப்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
