இந்துக்களால் அனுஷ்டிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி பெருவிழா

Jaffna Nuwara Eliya Sri Lanka Vinayagar Chaturthi
By Erimalai Sep 07, 2024 09:10 PM GMT
Report

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று சகல தடைகளையும் நீக்கும் கடவுளான விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நாட்டில் பல ஆலயங்களில் மிக சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று (07) யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கொட்டோடைப் பிள்ளையார் ஆலயத்தில் சதுர்த்தி உற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்துக்களால் அனுஷ்டிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி பெருவிழா | Ganesha Chaturthi Festival Celebrations Sri Lanka

ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற விசேட சதுர்த்தி உற்சவத்தில் அடியவர்கள் பலரும் கலந்து சிறப்பித்து விநாயக பெருமானை பக்தி பூர்வமாக வழிப்பட்டு சென்றுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்


நுவரெலியா

இதேவேளை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நுவரெலியா - பதுளை பிரதான வீதி இலக்கம் 60 இல் அமைந்துள்ள ஸ்ரீ மதுர கணபதி கோவிலில் நிகழும் சுப மங்களகரமான குரோதி வருஷம் ஆவணி மாதம் 22ஆம் நாளான நேற்று (07) அதிகாலை 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்று பின்னர் வசந்த மண்டப பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வருடார்ந்த சந்தன பிள்ளையார் ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.

சந்தன பிள்ளையார் ஊர்வலமானது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆலய நிர்வாகத்தினர் ஊடாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு சிறப்புப் பூஜை வழிபாடுகள் செய்து நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர கணபதி ஆலயத்தில் இருந்து நடை பவனியாக ஊர்வலம் சென்று வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் செய்து கங்கையில் கரைத்து விடப்பட்டுள்ளது.

குறித்த விநாயகர் சதுர்த்தி விழாவிலும் சந்தன பிள்ளையார் ஊர்வலத்திலும் பெருந்திரளான பக்தர்களும் கலந்து கொண்டதுடன் அனைவருக்கும் இறுதியில் அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது.

செய்தி - திவாகரன்

நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோயிலில் ஆவணி சதுர்த்திப் பெருவிழா

நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோயிலில் ஆவணி சதுர்த்திப் பெருவிழா

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம்

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம்

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US