கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் (Kataragama) நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்று (11.05.2024) ஆரம்பமாகியுள்ளது.
குறித்த பாதயாத்திரையானது, ஜெயாவேல்சாமி தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம்பெற்று சந்நிதியான் ஆலய பூசகரால் வேல் கையளிக்கப்பட்டுள்ளது.
சமய ஆசார முறை
இந்நிலையில், இந்த யாத்திரையில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அதேவேளை, சந்நதி கதிர்காமம் பாத யாத்திரைக் குழுவின் ஏற்பாட்டில் 23ஆவது வருடமாக இந்த பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
மேலும், இம்முறை பாத யாத்திரையில் கலந்து கொள்வோர் கட்டாயம் சமய ஆசார முறைப்படி கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam
