ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
பாதாள உலகக்கும்பல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் ஒருபக்கத்தில் யுக்திய நடவடிக்கையை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த ஆண்டில் மட்டும் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அறிவிப்பு
2024ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறு 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ(Nihal Talduwa) தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுகளில் பெரும்பாலானவை பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான தகராறுகளினால் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே நேற்றும் இன்றும் அஹுங்கல்லை பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |