கனகராயன் குளத்தில் கப் ரக வாகனம் விபத்து: இருவர் உயிரிழப்பு
கனகராயன் குளத்தில் கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தானது ஏ-9 வீதி கனகராயன்குளம் பகுதியில் இன்று (30.07) இடம்பெற்றுள்ளது.
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறி ஏற்றி சென்ற கப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சி.டி.விக்ரமரத்னவின் இறுதி நிமிடங்களில் இடப்பட்ட உத்தரவு.. ஒரு சில நிமிடங்களில் பிரிந்த உயிர்! உணர்ச்சிவசப்பட்ட 16 வருட கால விசுவாசி
விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ News Lankasri
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan