இலங்கை கடலில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஐரிஸ் தேனா கப்பல் ! விஜித ஹேரத் -அப்பாஸ் அராக்சி தொலைபேசி உரையாடல்
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தினார்.
இந்த உரையாடலின் போது, ஐரிஸ் தேனா கப்பலை மீட்க இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஈரான் தனது நன்றியை தெரிவித்துள்ளது.
தொலைபேசி உரையாடல்
மேலும், கப்பல் குழுவினரும் பிற ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை ஈரானுக்கு அனுப்ப உதவியதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரிஸ் தேனா கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், முன்னெப்போதும் இல்லாத போர்க்குற்றம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளையும், 1949 ஜெனீவா உடன்படிக்கைகளையும் கடுமையாக மீறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தை ஈரான் ஒருபோதும் மறக்காது என்றும், சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளையும் பயன்படுத்தும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இரு அமைச்சர்களும் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடியதாக இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri