கிளிநொச்சியில் மாணவர்கள் கைதானதும் கொழும்பிற்கு சென்ற தொலைபேசி அழைப்பு
சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் போது கொழும்பிற்கு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிப்பு தொடர்பான விடயங்களை கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கையாண்டுள்ளார்.
பல்கலை மாணவர்கள் விடுவிப்பு
கைது செய்யப்பட்ட மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உடனடியாக கொழும்பிலிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் தொடர்பு கொண்டு கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கதைத்துள்ளார்.
அத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் ஆகியோருடனான கலந்துரையாடலையடுத்தும், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கதைத்துக் கொண்டமைக்கு அமைவாகவும் கடுமையான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொலிஸ் பிணையில் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |