இந்தியாவை விட இலங்கையில் கோவிட் நோயாளர் விகிதம் அதிகம்! - பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்
இந்தியாவை விட இலங்கையில் கோவிட் தொற்று உறுதியாகின்றவர்களின் விகிதம் அதிகம் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கையில் தற்போது நாளாந்தம் 1500 இற்கும் அதிகமான கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள்.
இந்தியாவில் நாளாந்தம் 3 இலட்சம் அளவிலானோர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகின்ற போதும், இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் இலங்கையின் மக்கள் தொகை என்பவற்றை ஒப்பிடும் போது, இலங்கையில் கோவிட் தொற்றுக்கு ஆளாகின்றவர்களின் விகிதம் அதிகமாக இருக்கின்றது.
அதேநேரம், கோவிட் நோயாளர்களுக்கான சிகிச்சையளிப்பதற்கான கட்டில்களுக்கு எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.
தற்போது வைத்தியசாலைகளின் கொள்ளளவைக் காட்டிலும், அதிகளவான எண்ணிக்கையில்
கோவிட் நோயாளர்கள் இருக்கின்றனர். இது எதிர்காலத்தில் பெரும் நெருக்கடி நிலையை
ஏற்படுத்தும்" என குறிப்பிட்டுள்ளார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri