போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.
இரத்மலானைப் பிரதேசத்தில் காலி வீதியில் அமைந்துள்ள பிரபல மருந்தகம் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யுக்திய நடவடிக்கை
குறித்த மருந்தகத்தில் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
யுக்திய நடவடிக்கை காரணமாக நாட்டில் தற்போதைக்கு போதைப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த மருந்தகத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் போதைக்கு அடிமையானவர்கள் பலர் இந்த மருந்துக் கடைக்கு அடிக்கடி வருகை தருவது அவதானிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் திடீர் சோதனை மேற்கொண்டு, போதை மாத்திரைகளுடன் மருந்தக உரிமையாளரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri