பிரதான விடயத்தை திசை திருப்ப சுமந்திரன் சதி! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா எச்சரிக்கை

Sri Lankan Tamils Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran S Shritharan K.V.Thavarasha
By Benat Feb 20, 2024 10:14 PM GMT
Report

சுமந்திரனின் தற்போதைய செயற்பாடுகள் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவிக்கும் செயற்பாடாகும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

பிரதான விடயத்தை திசை திருப்பும் வேலையை சுமந்திரன் செய்து கொண்டிருக்கின்றார் என்றும் கே.வி.தவராசா சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு இல்லை: ஓய்வூதியம் வழங்குவதிலும் சிக்கல்

அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு இல்லை: ஓய்வூதியம் வழங்குவதிலும் சிக்கல்

நடைமுறையில் சாத்தியமற்ற விடயம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழு எடுத்திருந்த தீர்மானங்களுக்கு எதிராகவும் தேசிய பேராளர் மாநாட்டுக்கு எதிராகவும் திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் பெறப்பட்டுள்ள இடைக்கால நீதிமன்ற கட்டளைகள் தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அண்மையில் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டு இருந்தார்.


அந்த அறிக்கையில் கட்சியின் தலைவர்களும் வழக்கின் எதிராளியாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் தனது சகாக்களும் கேட்டுக் கொண்டால் கட்சிக்காக அவர் முன்னிலை ஆவதற்கும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

சட்டத்தின் பார்வையில் இந்தச் செய்தி சட்ட நுணுக்கமற்ற சிறுபிள்ளைத்தனமானது என்பது சட்டம் தெரிந்த யாவருக்கும் இலகுவாக புரியும்.

யாழ்ப்பாணத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தமிழரசு கட்சிக்கு புதிதாக தேர்வான தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கு 31.01.2024 அன்று  எழுதப்பட்ட கடிதம் ஊடகங்களில் பிரசுரமாகி இருந்தது.

தமிழீழ வைப்பகத்தில் இருந்து இலங்கை கைப்பற்றிய பெருந்தொகை தங்கம்! சபையில் அம்பலம்

தமிழீழ வைப்பகத்தில் இருந்து இலங்கை கைப்பற்றிய பெருந்தொகை தங்கம்! சபையில் அம்பலம்

வழக்காளியான பீட்டர் இளஞ்செழியன் தாக்கல் செய்த இவ் வழக்கில் 't4' என்று அடையாமிடப்பட்டு அந்தக் கடிதம் ஆவணமாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் வேளையில் சுமந்திரன் நீதிமன்றத்திற்கு ஒரு சாட்சியாக அழைக்கப்பட முடியும்.  வழக்கின் சாட்சியாக அழைக்கப்படும் எவரேனும் அந்த வழக்கில் மற்றைய எதிராளிக்காக முன்னிலையாவது நடைமுறையில் சாத்தியமற்ற விடயமாகும்.

ஏனெனில் ஒரு வழக்கில் சாட்சியாக குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர் அதே வழக்கில் சாட்சியமளிக்க மட்டுமே முடியும்.

அத்தோடு திருகோணமலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 6ஆம் எதிராளியாக சுமந்திரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். எனவே எதிராளி தனக்குத் தானே வாதாட முடியுமே தவிர கட்சிக்காகவோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிற எதிராளிகளுக்காகவோ எக்காரணம் கொண்டும் வாதாடுவதில்லை.

அவர் தன்னை காத்துக் கொள்ள தனக்காக மட்டுமே வாதாட முடியும். மேலும் தனக்காக வாதாடுபவர்கள் சாட்சியம் அளிக்கும் சூழ்நிலையும் உருவாகலாம்.

வலுவிழக்கும் அமெரிக்க டொலர்

வலுவிழக்கும் அமெரிக்க டொலர்

ஒரு நடைமுறை சாத்தியமற்ற விடயத்தை எந்த நீதிமன்றமும் அனுமதிப்பதும் இல்லை கடைப்பிடிக்கப்படுவதுமில்லை.

சட்டத்தின் அடிப்படைகள் மேலோட்டமாக தெரிந்த ஒருவருக்கு கூட இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய இந்த விடயத்தை ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் பிரதான விடயத்தை திசை திருப்புவதற்காக மாத்திரம் செய்த ஒன்றாக மட்டுமே என்னால் அவதானிக்க முடிகின்றது.

தமிழ் அரசுக்கட்சியை பாதுகாப்பேன் என்பது பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவிக்கும் செயல்பாடாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொடுப்பனவு : கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

அதிகரிக்கும் கொடுப்பனவு : கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US