அரசியல் காழ்ப்புணர்ச்சியில் புதிய பேருந்து நிலையத்தை நாசம் செய்துள்ள தீய சக்திகள்
புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று முன் தினம்(08)திறந்து வைக்கப்பட்டது. இந்த புனரமைப்புப் பணிகள் சுமார் 424 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திறக்கபட்டு 2ஆவது நாளிலே மிக மோசமான முறையில் சேதமாக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான மலசலக்கூடங்களில் 5 குழாய்கள் உடைக்கப்பட்டுள்ளன. பூச்செடிகள் மற்றும் சுவர்கள் உடைக்கப்பட்டுள்ளன.
இதனையறிந்த போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன உடனடியாக அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
இது அறியாமையினால் செய்யப்படும் செயலல்ல, மாறாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் ஒரு சதி முயற்சி. அரசியல் ரீதியாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும் அவதூறுப் பிரச்சாரங்கள் ஒருபுறமிருக்க, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் News Insight தமிழ் நிகழ்ச்சி...