துரத்தும் சிஐடி! சிகிச்கைக்காக சிங்கப்பூரில் தஞ்சமடைந்த ரணில்..
குற்றப்புலனாய்வுத் துறையினரின் பழிவாங்கும் நடவடிக்கைகள் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிங்கப்பூரில் வைத்திய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பழிவாங்கும் சிஐடி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் குற்றப்புலனாய்வுத் துறையினரால் அழைக்கப்பட்டு தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.
குற்றப்புலனாய்வுத் துறையினரின் இந்த பழிவாங்கும் வேட்டை காரணமாகவே, ரணில் விக்ரமசிங்க மருத்துவ தேவைகளுக்காக சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்தது.

பொய்களைப் பரப்பி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் விளைவே இன்று நாடு ஒரு மோசமான இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வேறு எந்தக் கட்சியையும் விட தற்போதைய அரசாங்கம் பொதுமக்களிடம் அதிகமாகப் பொய் கூறியுள்ளது.
எதிர்காலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகள் பொய்களைப் பரப்பாமல் இருப்பது மிகவும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.