மட்டக்களப்பில் நீண்ட நாட்களின் பின் பெட்ரோல் விநியோகம் (Video)
மட்டக்களப்பு - ஆரையம்பதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கடந்த 15 நாட்களுக்கு பின்னர் நேற்று(25) பெட்ரோல் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்துள்ள எரிபொருளை பெற்றுகொள்ள நீண்ட வரிசையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளின் உரிமையாளர்கள் காத்து நின்றுள்ளனர்.
பெட்ரோல் விநியோகம்
பெட்ரோல் நேற்று(25) காலை கொண்டுவரப்பட்டதையடுத்து ஒரு பகுதியில் அரசாங்க ஊழியர்களுக்கும், இன்னொரு பகுதியில் பொது மக்களுக்கும் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பெட்ரோலை பெறுவதற்கு மிக நீண்ட தூரம் வரிசையில் காத்து நின்றுள்ளனர்.
ஒழுங்குபடுத்தல்
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சென்று எரிபொருள் விநியோகத்தை அவதானித்துள்ளார்.
மேலும் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் காத்தான்குடி நகர சபை ஊழியர்களுக்கு பெட்ரோலை வழங்குவதற்கான ஒழுங்குபடுத்தலை மேற்கொண்டுள்ளார்.
இந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கும் திணைக்கள தலைவர்களின் அனுமதி அட்டையுடன் சென்றவர்களுக்கும் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
