நாட்டில் தொடரும் எரிபொருள் வரிசை! வெளியான காரணம்
நாட்டில் எவ்வித எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிவாயு நிரப்பு நிலையங்களில் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் உட்பட வேறு எந்த பெட்ரோலிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என டுவிட்டர் பதிவொன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக வௌியான செய்தியை தொடர்ந்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
There is no shortage of Petrol 95 stocks or any other petroleum products with CPC & LIOC. Daily requirement of Petrol 95 is about 80-100 MT islandwide. There’s adequate stocks available with fuel stations & all orders placed will be distributed. The next cargo of 9000 MT of… pic.twitter.com/RAl9qOQ2Zc
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 18, 2023
பெட்ரோலுக்கு தட்டுப்பாடு
இதேவேளை நாட்டில் போதுமான அளவு ஒக்டேன் 95 ரக பெட்ரோல் இருப்பதாக இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையம் தெரிவித்துள்ளது.
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து 570 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 95 ஒக்டேன் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பல நாட்களாக இந்த தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகின.
இதேவேளை 95 ஒக்டேன் பெட்ரோல் தட்டுப்பாடு தொடர்பில் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போது 95 ஒக்டேன் ரக பெட்ரோல் கிடைக்கப்பெறுவதாக இலங்கை பெட்ரோலிய களஞ்சிய நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை திருத்தம்
இதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் திகதியில் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எரிபொருள் விலையை மாதம் முதலாம் திகதி திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
கடந்த விலை திருத்தத்தின் போது, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் போதியளவு இருப்புக்களை வைத்திருக்காத காரணத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் காணப்பட்டன.
எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் முன்பதிவு வழங்காததே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் எரிபொருள் இருப்புக்களை பராமரிக்காத பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |