எரிபொருள் பிரச்சினையை எதிர்நோக்கும் கிளிநொச்சி விவசாயிகள்(Photos)
கிளிநொச்சி - கல்மடுக்குளத்தின் கீழ் சிறுபோக பயிர் செய்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு அறுவடைக்கான எரிபொருள் வழங்கப்படாத நிலையில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அறுவடை நடைபெற்று வரும் நிலையில் எரிபொருள் பெறமுடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாக கல்மடு கமக்கார அமைப்புக்கள் மற்றும் தருமபுர கமக்கார அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

விவசாயிகளின் கோரிக்கை
எரிபொருளை 1200ரூபாவிற்கு பெறவேண்டியுள்ளதாகவும் நெல்லினை களஞ்சியப்படுத்தும் உரப்பை பெருவதிளும் பெரும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது என கல்மடு விவசாயிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
எனவே உரிய நேரத்தில் எரிபொருள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



