மன்னாரில் எரிபொருள் அட்டை ஊடாக பெட்ரோல் விநியோகம்
மன்னார்- முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நாளை வியாழன் (21) மற்றும் வெள்ளிக்கிழமை(22) ஆகிய இரு தினங்கள் எரிபொருள் அட்டை ஊடாக வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
நேர அட்டவணை
குறித்த நேர அட்டவணைக்கு அமைவாக குறிப்பிட்ட கிராம மக்கள் சென்று தமது வாகனங்களுக்கான எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
ஏனைய கிராம மக்களுக்கு பெட்ரோல் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளரினால் முன் அறிவித்தல் வழங்கப்படும்.
தடைப்பட்ட எரிபொருள் விநியோகம்
இன்றையதினம்(20) புதன் கிழமை முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் எரிபொருள் தாங்கி வழியில் பழுதாகி தாமதம் ஏற்பட்டது.
இதனால் இன்றைய தினம் முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள்
நிலையத்தில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
