நுணாவில் லங்கா ஐ.ஓ.சியில் எரிபொருள் விநியோகம்! நேரம் தொடர்பான தகவல் வெளியானது
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆசிரியர்களுக்கும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணிகளுக்கும், வட மாகாணத்தைச் சேர்ந்த தவில் - நாதஸ்வர கலைஞர்களுக்கும் கியூ.ஆர்.கோட் அடிப்படையில் பெட்ரோல் விநியோகிக்கப்படவுள்ளது.
சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா அறிவித்துள்ளார்.
இதன்போது வாகன பின்னிலக்கங்கள் கருத்தில் கொள்ளப்பட மாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளை 1 ஆம் திகதி திங்கட்கிழமை தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஜே/ 288 முதல் ஜே/ 320 வரையுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கும், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளுக்கும் பெட்ரோல் விநியோகிக்கப்படவுள்ளது.
நாளை மறுநாள் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஜே/ 321 தொடக்கம் ஜே/ 347 வரையுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கும், வட மாகாணத்திலுள்ள தவில் - நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் பெட்ரோல் விநியோகிக்கப்படவுள்ளது.
காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.
எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவரும் அனைவரும் தாங்கள் வசிக்கும் கிராம அலுவலர் பிரிவை உறுதிப்படுத்தும் முகமாக குடும்ப அட்டை அல்லது வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஒர் ஆவணத்தையும், தொழிலை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவிடயந் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நுணாவில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா, பொதுமக்களின் நேர விரயம், சிரமம், அலைச்சல் ஆகியவற்றைத் தவிர்க்கும் முகமாகவே இவ்வாறான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய இந்த முயற்சிக்கு பொது மக்களுடைய பூரண ஒத்துழைப்பு அவசியம். பொது மக்கள் அனைவருக்கும் சுழற்சி முறையில் எரிபொருள் பெற்றுக் கொடுக்கப்படும் - என்றார்.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் எரிபொருள் விநியோகிக்கப்படும் நேரம்..
திங்கள்..
J/288-290_ 09.00 am to 09.30 am.
J/291-293- 09.30 am to 10.00 am
J/294-296_10.00 am to 10 30am
J/297-299 - 10.30 am to 11.00 am.
J/300-302_11.00 am to 11.30 am
J/303-305 11.30 am to 12.00 pm
J/306-308_ 12.30 pm to 01.00pm
J/309-311_ 02.00 pm to 02.30 pm
J/312-314 _ 02.30 pm to 03.00 pm
J/315-317 _ 03.00 pm to 03.30 pm
J/318-320 - 03.30 pm to 04.00 pm
செவ்வாய்..
J/321-323_ 09.00 am to 09.30 am.
J/324 -326- 09.30 am to 10.00 am
J/327 -329_10.00 am to 10 30am
J/330 -332- 10.30 am to 11.00 am.
J/333-335_ 11.00 am to 11.30 am
J/336-338 11.30 am to 12.00 pm
J/339-341_ 12.30 pm to 01.00pm
J/342-344_ 02.00 pm to 03.00 pm
J/345-347 _ 03.00 pm to 04.00 pm
முதலாம் இணைப்பு
வடக்கு மாகாணத்திலுள்ள மதகுருமார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை(27) நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல சிரமத்தின் மத்தியில் எரிபொருள் பெற்று வருகின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் அனைத்து மக்களுக்கும் எரிபொருள் கிடைக்கும் வண்ணம் புதிய நடைமுறைகளின் கீழ் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருளினை மக்களுக்கு வழங்கி வந்திருந்தோம் என நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“இவ்வாறான எரிபொருள் தட்டுப்பாடான சூழ்நிலையில் வடக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற மாற்றுத் திறனாளிகள் வைத்தியசாலை செல்வதற்கும் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்வதற்கும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிரமப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ஆகையால் நாளைய தினம் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குவதற்கு முன்வந்துள்ளோம்.
அத்துடன் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் சர்வமத குருமார்களும் எரிபொருளினை பெற்றுக்கொள்வதில் சிரமப்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது அந்தவகையில் நாளைய தினம் சர்வ மதகுருமார்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
நாளைய தினம் வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சர்வமத குருமார்களின் வாகனங்களுக்கு, மோட்டார் சைக்கிளுக்கு 2000 ரூபாய்க்கு முச்சக்கர வண்டிகளுக்கு 2500 ரூபாய்க்கு கார்களுக்கு 3500 ரூபாய்க்கு என்ற அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்
எரிபொருள் விநியோகம்
கிராம சேவகர் பிரிவு அடிப்படையில் எரிபொருள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக கிராம அலுவலர் பிரிவு அடிப்படையில் தொடர்ந்தும் எரிபொருள் வழங்கப்படுமென நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்ப நிலையத்தின் உரிமையாளர் வை.சிவராசா தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தென்மராட்சி பிரதேசத்திலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளுக்கு எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பெட்ரோல் விநியோகம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை,
J/315
J/316
J/317
J/318
J/319
J/320
J/321
J/322 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பெட்ரோல் வழங்கப்படவுள்ளது.
மேலும் தென்மராட்சி பிரதேசத்தின் அயற் கிராமங்களான புத்தூர் கிழக்கு J/278 வாதரவத்தை J/280 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் புதன்கிழமை தென்மராட்சி பிரதேசத்தின்,
J/323
J/324
J/325
J/326
J/327
J/328
J/329
J/330 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பெட்ரோல் வழங்கப்படுமென நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்ப நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தென்மராட்சி பிரதேசத்திலுள்ள 60 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் சுழற்சி முறையில் தொடர்ந்தும் பெட்ரோல் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வருகை தரும் போதும் மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு அட்டையை வைத்திருத்தல் அவசியமானதாகும் எனவும் வை.சிவராசா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, நுணாவில் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் எதிர்வரும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகிக்கப்படும் முறை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
புதிய எரிபொருள் அட்டை நடைமுறையின்படி மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படுமென நுணாவில் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட குறித்த எரிபொருள் அட்டை உள்ளவர்களுக்கு கீழ் வரும் கிராமசேவகர் பிரிவுகளின் படி நுணாவில் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எதிர்வரும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் எரிபொருள் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
21ம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பம் - வெளியான அறிவிப்பு |
வியாழக்கிழமைக்கான தெரிவு செய்யப்பட்ட கிராமசேவகர் பிரிவுகள்
பிரிவுகள் நேரம்
- J/301 09.00 am to 10.00 am
- J/302 10.00 am to 11.00 am
- J/303 11.00 am to 12 00am
- J/304 01.00 am to 02.00 am
- J/305 02.00 am to 03.00 pm
- J/306 03.00 pm to 04.00 pm
-
J/307 04.00 pm to 05.00 pm
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் |
வெள்ளிக்கிழமைக்கான தெரிவு செய்யப்பட்ட கிராமசேவகர் பிரிவுகள்
பிரிவுகள் நேரம்
- J/308 09.00 am to 10.00 am
- J/309 10.00 am to 11.00 am
- J/310 11.00 am to 12 00am
- J/311 01.00 am to 02.00 am
- J/312 02.00 am to 03.00 pm
- J/313 03.00 pm to 04..00 pm
-
J/314 04.00 pm to 05.00 pm
சனிக்கிழமைக்கான தெரிவு செய்யப்பட்ட கிராமசேவகர் பிரிவுகள்
பிரிவுகள் நேரம்
- J/340 09.00 am to 09.45 am
- J/341 09.45 am to 10.30 am
- J/342 10.30 am to 11.15 am
- J/343 11.15 am to 12.00 pm
- J/344 12.00 am to 12.45 pm
- J/345 01.45 pm to 02.30 pm
- J/346 02.30 pm to 03.15 pm
-
J/347 03.15 pm to 04.00 pm
இதேவேளை குறித்த கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் எரிபொருள் அட்டை பெற்றுக் கொள்ளாது இருந்தால் உரிய கிராமசேவகரை தொடர்புகொண்டு எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேல் காணப்படும் கிராமசேவகர் பிரிவில் எரிபொருள் அட்டையினை பெற்று எரிபொருளினை பெற்றுக் கொண்டவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது எனவும், ஏனைய கிராமசேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்களுக்கு அடுத்து வரும் கிழமை நாட்களில் படிப்படியாக எரிபொருட்கள் வழங்கப்படுமெனவும் வைத்திலிங்கம் சிவராசா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டையை கொண்டு வருபவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுமெனவும், அட்டை கொண்டு வராதவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.