அவன்கார்ட் நிறுவனத்தின் 2 மனுக்களும் மேன்முறையீட்டு நீதிமன்றால் தள்ளுபடி
இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சியங்களை மீண்டும் கடற்படையினரிடமே ஒப்படைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, அவன்கார்ட் மெரிடைம் செக்யூரிட்டி நிறுவனம் தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(25.02.2026) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.
பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம்
பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்ட கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு எதிராக அவன்கார்ட் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் சிலரால் இந்த ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த நிறுவனம் தனது வணிகச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தி வந்த ஆயுதக் களஞ்சியங்களை மீண்டும் அரசு பொறுப்பேற்பதற்கு எடுத்த முடிவை இரத்துச் செய்யுமாறு கோரியே நீதிமன்றில் முறையிடப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்த நீதியரசர்கள், பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினர்.
இம் மனுக்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு எவ்வித சட்டபூர்வமான அடிப்படைகளும் இல்லை. இதன் காரணமாக, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப வேண்டிய தேவையே எழவில்லை.
நீதிமன்றின் இந்த உத்தரவின் மூலம் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு உபகரணங்கள் மீதான கடற்படையின் முழுமையான அதிகாரம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam