இலங்கையின் முன்னணி மதுபான நிறுவனங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றில் மனு தாக்கல்
இலங்கையின் முன்னணி மதுபான நிறுவனங்கள் வைத்துள்ள வரிநிலுவையை செலுத்த உத்தரவிடுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி மதுபான நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய பாரிய அளவிலான வரி நிலுவையை வசூலிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரியே, உச்ச நீதிமன்றத்தில் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 17 சிவில் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து, இதனைத் தாக்கல் செய்துள்ளனர்.
மதுபான உற்பத்தி
மேலும் நிலுவைத் தொகையை வழங்கும் வரை அந்தந்த மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கலால் திணைக்கள ஆணையாளர், நிதியமைச்சின் செயலாளர், நிதி இராஜாங்க அமைச்சர், கணக்காய்வாளர் நாயகம் மற்றும் கடனை செலுத்தாத அனைத்து மதுபான நிறுவனங்களும் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த முன்னணி மதுபான நிறுவனங்கள், 26 பில்லியன் ரூபா வரிநிலுவையை வைத்துள்ளதாகவும், இந்த வரிகளை வசூலிக்கத் தவறியமையும் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணம் எனத் தெரிவிக்கும் மனுதாரர்கள், நாடு வங்குரோத்து நிலையை அடைந்த பின்னரும் கூட இந்த வரி நிலுவையை வசூலிக்கத் தவறியுள்ளதாகவும் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் தமிழ்த் தேசிய அரசியலை கட்டியெழுப்ப வேண்டும்: சிறீதரனிடம் வலியுறுத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |