உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மனு
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு வழிவகுத்த சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் கடமை தவறிய செயலுக்காக, நம்பகமான விசாரணை நடத்தி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை சமூகம் மற்றும் மதத்திற்கான மையத்தின் தலைவர் ரொஹான் சில்வா மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சுரச் நிலங்க ஆகியோர் நேற்றையதினம் (01.03.2024) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சட்டமா அதிபருக்கு உத்தரவு
பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பெயரிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக உரிய நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் தமது மனுவில் கோரியுள்ளனர்.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
