இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 18 பில்லியன் இலாபத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியத் துறையை மேலும் மேம்படுத்தவும் பல திட்டங்களைத் தொடங்கவும் இந்த இலாபம் பயன்படுத்தப்படுகிறது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
இலாபம்
இதற்கமைய, எரிபொருள் தளவாடங்களை மேம்படுத்துதல் மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆதரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த இலாபம் பயன்படுத்தப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.
மேலும், முத்துராஜவெல முனையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை விமான எரிபொருள் குழாய் அமைக்கும் திட்டங்களையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.




